Thooliyile Ada Vantha songs lyrics from Chinna Thambi tamil movie

Thooliyile Ada Vantha songs lyrics from Chinna Thambi and all songs lyrics from Chinna Thambi, தூளியிலே ஆடவந்த பாடல் வரிகள்

Thooliyile Ada Vantha songs lyrics from Chinna Thambi tamil movie

தூளியிலே ஆடவந்த பாடல் வரிகள்

Movie Chinna Thambi (1991) (சின்ன தம்பி) Movie Name (in Tamil) (சின்ன தம்பி)
Year (1991) Music Ilaiyaraaja
Lyrics Vaali Singers K. S. Chithra, Mano

 

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட


பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்
நான் படிச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிக்கவில்ல சாட்சியிந்த பூமி தான்
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட



சோறுபோடத் தாயிருக்க பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்
நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா
ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லைதான்
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

Lyrics List

 

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com