தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai Regional Meteorological Centre has issued a rain alert for the next four days.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Red Alart Chennai

Subscribe to Makkal Media | மக்கள் மீடியா :

அக். 14-ம் தேதி

விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக் .15-ம் தேதி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் வீழ்ச்சி காணலாம்.

அக் .16-ம் தேதி

திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இதுடன், வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக் 17-ம் தேதி:

ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே சமயம், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் காணப்படக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று முதல் மழை துவங்கி, நாளை மழை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தற்போது, இந்தியாவின் மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளிலிருந்து தென்மேற்கு பருவமழை விலகி வருகிறது. எதிர்வரும் இரண்டு நாள்களில், தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகி, 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான favourable சூழ்நிலை உருவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.