All Tax Exemptions Will Be Removed Told Finance Minister Nirmala Sitharaman-மத்திய அரசின் நோக்கம் வருமான வரி விலக்கை நீக்குவது நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா அதிரடி

வருமான வரி விலக்குகள் அனைத்தையும் படிப்படியாக குறைப்பதே மத்திய அரசின் நோக்கம் வருமான வரி விலக்கை நீக்குவது அமைச்சர் நிர்மலா அதிரடி

All Tax Exemptions Will Be Removed Told Finance Minister Nirmala Sitharaman-மத்திய அரசின் நோக்கம் வருமான வரி விலக்கை நீக்குவது நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா அதிரடி
-மத்திய அரசின் நோக்கம் வருமான வரி விலக்கை நீக்குவது நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா அதிரடி

    

2020 -21 மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்து, புதிய சாதனையை படைத்துள்ளார் அமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இன்று வாசித்த பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக வருமான வரி  5 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது அது அப்படியே தொடரும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், 5 -7.5 லட்சம் வரை, ஆண்டு வருமானம் உள்ளவர்கள் இனி 15%க்கு பதிலாக 10% வரி செலுத்தினால் போதுமானது என்று குறைக்கப்பட்டுள்ளது.இதேபோன்று 7.5 -10 லட்சம் வருமானம் உள்ளவர்கள் வரி விகிதம் 20%லிருந்து 15% ஆகவும் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10- 12.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் வரி விகிதம் 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, 12.5 -15 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி விகிதம் 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  கூறும்போது, "வருமான வரி நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கத்தில்தான், இந்த வரியை செலுத்துவோருக்கான புதிய திட்டம் இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், வருமான வரி விலக்குகளை படிப்படியாக நீக்குவதை மத்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நோக்கத்தை அடைய, வருமான வரி குறித்து, பட்ஜெட்டில் இன்று இடம்பெற்றுள்ள அறிவிப்பு வழிவகுக்கும். இந்த வரி சீரமைப்பு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் " என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com