Siriya Paravai songs lyrics from Andha Oru Nimidam tamil movie
Siriya Paravai songs lyrics from Andha Oru Nimidam and all songs lyrics from Andha Oru Nimidam, சிறிய பறவை பாடல் வரிகள்
சிறிய பறவை பாடல் வரிகள்
Movie | Andha Oru Nimidam (1985) (அந்த ஒரு நிமிடம்) | Movie Name (in Tamil) | (அந்த ஒரு நிமிடம்) |
Year | (1985) | Music | Ilaiyaraaja |
Lyrics | Singers | S. Janaki, S. P. Balasubramaniam |
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக
வருகவே வருகவே
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே
அன்பு லைலா
ஹும்
நீயே எந்தன் ஜீவ சொந்தம்
ஹஹ்ஹ
நீ சிரித்தால் பாலை எங்கும் பூ வசந்தம்
சம்மதம் என்ன சொல்லவா
மௌனமே சொல்லும் அல்லவா
கிண்ணமாய் என்னை மாற்றவா
உன்னையே வந்து ஊற்றவா
மது போதை வேண்டுமா
இதழ் போதை நல்லது
உன் பேரைச்சொல்கிறேன்
அதில் போதை உள்ளது
{வருகவே வருகவே
ஆ...ஆ....} (ஓவர்லாப்)
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக
வருகவே வருகவே
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
ஆ....ப த நி சா நி ச நி த ப த ம ப க ம பா
த நி த பா ம ம க பா ம நி த நி தா
க ம த மா க ம த பா
மஞ்சமே தமிழின் மன்றமே
புதிய சந்தமே சிந்தினேன்
அன்பனே இளைய கம்பனே
கவிதை நண்பனே நம்பினேன்
சொர்ணமே அரச அன்னமே
இதழின் யுத்தமே முத்தமே
நெற்றியில் வியர்வை சொட்டுமே
கைகள் பற்றுமே ஒற்றுமே
சோழர் குயில் பாடுகையில்
சோலைக்குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே
வல்லினங்கள் வாய் வலிக்கும்
சந்தமே இன்பம் தந்தது
கங்கையே இங்கு வந்தது
தென்றலே இன்று நின்றது
நன்று தான் சந்தம் என்றது
கன்றுகள் ரெண்டு இன்றுபோல்
என்றும் வென்று வாழ்கின்றது
{வாழ்கவே...வாழ்கவே..
ஆ...ஆ....}
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக
{வருகவே வருகவே
ஆ...ஆ....}
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
அன்பு ரோமியோ
இங்கே ஒரு காவல் இல்லை
தேன் குடித்தால்
இங்கே ஒரு கேள்வி இல்லை
காதலின் கல்விச் சாலையில்
கண்களே நல்ல தத்துவம்
பூவையின் மேனி அற்புதம்
பூக்களால் செய்த புத்தகம்
நம் காதல் பாடவே
சுரம் ஏழு போதுமா
நம் நேசம் பேசவே
ஒரு பாஷை போதுமா
{கவிமழை பொழியுமா
ஆ...ஆ....}
ஆ..ஹஹ்ஹஹா...பழைய கனவு
உனக்கு எதற்கு கலையட்டுமே
நமது கதையை
உலகம் முழுதும் புகழட்டுமே
கவிதை எழுத இளைய கவிகள்
{எழுகவே எழுகவே
ஆ...ஆ....} (ஓவர்லாப்)
பழைய கனவு
உனக்கு எதற்கு கலையட்டுமே
நமது கதையை
உலகம் முழுதும் புகழட்டுமே
Lyrics List
|
மேலும் தெரிந்து கொள்ள:
Comments (0)