Annakili Unnai songs lyrics from Annakili tamil movie

Annakili Unnai songs lyrics from Annakili and all songs lyrics from Annakili, அன்னக்கிளி (பெண்) பாடல் வரிகள்

Annakili Unnai songs lyrics from Annakili tamil movie

அன்னக்கிளி (பெண்) பாடல் வரிகள்

 

Movie Annakili (1976) (அன்னக்கிளி) Movie Name (in Tamil) (அன்னக்கிளி)
Year 1976 Music Ilaiyaraaja
Lyrics Panchu Arunachalam Singers S. Janaki

 

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே


நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்
நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்
உறங்காத உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி
கலங்காதே காத்திருக்கேன் கைபிடிக்க வருவாரோ
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே


கனவோடு சில நாள் நெனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
கனவோடு சில நாள் நெனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
மழை பேஞ்சா மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நாட்டு கருதறுத்து
போரடிக்கப் போன மாமன் பொழுதிருக்க வருவாரோ
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே

நதியென்றால் அங்கே கரையுண்டு காவல்
கொடியென்றால் அதைக் காக்க மரமே காவல்
புள்ளி போட்ட புள்ளி போட்ட ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக்காரி
நெல்லருக்கப் போகையில் யார் கன்னி உந்தன் காவலடி
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே

Lyrics List

 

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com