தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்கும் நஸ்ரியா.
நஸ்ரியா,தமிழ் சினிமா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாள திரை துறையில் மற்றும் தமிழ் துறையிலும் வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நஸ்ரியாஇப்பொழுது தெலுங்கில் அடடா சுந்தரா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகி உள்ளார்.இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலில் நேர்காணலில் பேசியே நஸ்ரியா தமிழ் சினிமாவை ரொம்பவே மிஸ் பண்றேன் கூறியுள்ளார்.
நடிகை நஸ்ரியா முதல் படத்திலேயே க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை வெகுவாக வென்றார் அலட்டிக்கொள்ளாத இயல்பான நடிப்பு க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் அழகிய நடனம் என முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு கனவுக்கன்னியாக மாறிய நஸ்ரியா அதைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது நேரம் படத்தை தொடர்ந்து நையாண்டி,ராஜா ராணி,திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் வரிசையாகச் வெற்றி பெற்று வந்த நிலையில் நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நடிகை நஸ்ரியா திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகினார். இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் அந்த வகையில் மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான டிரான்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நஸ்ரியா அந்தபடத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் பல சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
தமிழ் சினிமாவில் நஸ்ரியா எப்போது நடிப்பார் என பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கையில் தனியார் யூட்யூப் சேனல் நேர்காணலில் பேசிய நஸ்ரியா தமிழ் சினிமாவை ரொம்பவே மிஸ் பண்றேன் என கூறியுள்ளார். எனக்கு தமிழ் ரசிகர்களை அவ்வளவு பிடிக்கும் எனக் கூறியுள்ளார் . எனவே மீண்டும் நஸ்ரியா தமிழில் படங்களில் நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments (0)