Raajaa Enbar songs lyrics from Bhuvana Oru Kelvi Kuri tamil movie

Raajaa Enbar songs lyrics from Bhuvana Oru Kelvi Kuri and all songs lyrics from Bhuvana Oru Kelvi Kuri, ராஜா என்பார் பாடல் வரிகள்

Raajaa Enbar songs lyrics from Bhuvana Oru Kelvi Kuri tamil movie

ராஜா என்பார் பாடல் வரிகள்

 

Movie Bhuvana Oru Kelvi Kuri (1977) (புவனா ஒரு கேள்விக்குறி) Movie Name (in Tamil) (புவனா ஒரு கேள்விக்குறி)
Year (1977) Music Ilaiyaraaja
Lyrics   Singers S. Janaki, S. P. Balasubramaniam

 

ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்

ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ

கல்லுக்குள் ஈரம் இல்லை
நெஞ்சுக்கும் இறக்கம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
அனுபவிக்க யோகம் இல்லை

கல்லுக்குள் ஈரம் இல்லை
நெஞ்சுக்கும் இறக்கம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
அனுபவிக்க யோகம் இல்லை

பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழி இல்லை

ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ

நிலவுக்கு வானம் உண்டு
மலருக்கு வாசம் உண்டு
கொடிக்கொரு கிளையும் உண்டு
எனக்கென்று என்ன உண்டு

நிலவுக்கு வானம் உண்டு
மலருக்கு வாசம் உண்டு
கொடிக்கொரு கிளையும் உண்டு
எனக்கென்று என்ன உண்டு

ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை

ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்லுறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்

தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்

தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்

மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு

ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்லுறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்

Lyrics List

 

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com