bangalore in pink saree girl - பெங்களூரை கலக்கிய பிங்க் சேலை பெண்கள்

பெண்களுக்கு மாதந்திர தொகையாக ரூ. 12௦௦௦ தர வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

bangalore in pink saree girl -  பெங்களூரை கலக்கிய பிங்க் சேலை பெண்கள்

பெங்களூரில் இளஞ்சிவப்பு நிற சேலை{பிங்க் சேலை} உடையணிந்து அங்கீகரிக்கப் பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHAs),நகரின் மையப்பகுதியில் வந்து போராட்டம் நடத்தினர் . பெங்களூர் மக்களையே திரும்பி பார்க்க வைத்துள்ளது இந்த போராட்டம். இந்த போராட்டமானது சிட்டி ரயில் நிலையத்திலிருந்து சுதந்திர பூங்கா வரை 2km  நடந்து சென்றனர் இது பார்ப்பதற்கு இவர்கள் பெண்களா இல்லை பூக்களின் ஊர்வலமா என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு சுமார் 10000க்கும் மேற்ப்பட்ட மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த போராட்டமானது மாதாந்திர கவுரவத் தொகையாக தங்களுக்கு தலா ரூ .12,000 வழங்கப்பட வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கையாக இருந்தது.என்றும் கடந்த 15 மாதங்களாக எங்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 35௦௦ வழங்கப்படவில்லை என்பதும் அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
l  இது பற்றி  பல முறை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலுவை சந்தித்து பேசியும்  எந்த வித பலனும் இல்லாததால் தான் இந்த போராட்டம் நடப்பதாக கூறினர். 

AIUTUC இன் மாநிலக் குழு உறுப்பினர் ரமா அவர்களிடம் கருத்து கேட்ட போது 41,000 'ஆஷா' தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் அவர்களில் 2௦ % பேர் மட்டுமே சம்பளம் பெறுகின்றனர் என்றும் மீதம் உள்ளவர்கள் சம்பளம் ஏதும் பெறாமல் இருந்த போதிலும் அவர்கள் வேலை பார்க்கின்றனர் என்று கூறினார் அவர்கள் எவ்வளவு காலம் காத்திருக்க முடியும். அவர்களின் சம்பளத்தை அரசு உடனடியாக கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார் ,AIUTUC இன் மாநிலக் குழு உறுப்பினர் ரமா அவர்கள். இந்த பிங்க் சேலை போராட்டத்தின் மூலம் அவர்களுக்கு கிடைக்க வேண்டியஉரிய சம்பளம் கிடைக்க வேண்டும் என்பது கர்நாடக மக்களின் எண்ணாமாக உள்ளது. 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்