Lakshman Sruthi Raman Rip - லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் அவர்களின் மரணம்

லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் அவர்களின் தற்கொலை

Lakshman Sruthi Raman Rip - லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் அவர்களின் மரணம்
raman suicide

லக்ஷ்மன் சுருதி என்றாலே இசை தான். பல இசை கச்சேரிகள் செய்தவர். இந்த குழுவின் உரிமையாளர்கள் இருவர் ராமன் மற்றும் லக்ஷ்மன். லக்ஷ்மன் சுருதி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் ராமன்.  அவர்களை பற்றி நம் அனைவரும்  அறிந்தது அவர் இசை கச்சேரிகள் நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே இது மட்டும் இல்லை அவர் ஒரு மிகச் சிறந்த பரதநாட்டியகலைஞரும் ஆவார்

ராமன் அவர்கள் சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் படித்தவர். 15 வருடமாக சென்னையில் திருவையாறு நடத்தி வந்தவர். இவர் நட்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். அவருடைய குழுவில் வேலை பார்ப்பவர்களை தன் குடும்பம் போல கருதக்கூடியவர். இந்த குணமே அவரை மிகச் சிறந்த இடத்திற்கு அழைத்து சென்றதாக அவரின் நட்பு வட்டாரங்கள் கூறுகின்றனர்.  இவருக்கு இசை எப்படி புடிக்குமோ அது போலே கிரிக்கெட் அவருக்கு மிகவும் பிடிக்குமாம், இசை கச்சேரி இல்லாத நாளில் அவர் அதிகம் செலவிடும் நேரம் கிரிக்கெட் தான்.

அவருக்கு மிகவும் பிடித்த இசைஅமைப்பாளர் ராஜாசார் தான் , அவர் இசை துறையில் ஏ.ர் ரகுமான் அவர்கள் கொண்டு வந்த பல மாற்றங்கள் குறித்து தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வாராம். இசை கச்சேரி ஒன்றிற்கு அவர் ஒப்புதல் அளித்து விட்டால் எவ்வளவு நேரம் ஆனாலும் அதை சிறப்பாக செய்து கொடுப்பதில் மிகச் சிறந்தவர். இவர்  இந்த வருடமும் சென்னையில் திருவையாறு இசை கச்சேரி  சிறப்பாக நடத்திக்கொண்டு இருந்தார், இசை கச்சேரி நடந்து கொண்டு இருக்கும் போது பாதியிலேயே அவர் அங்கிருந்து வந்து அசோக் நகரில் உள்ள தன் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,

இவரின் மரணம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. ராமன் அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை நடை பெற்றதாகவும் ,அதன் விளைவாக அவருக்கு உடம்பில் கட்டிகள் உருவானதாகவும் அதன் வலி தாங்கமுடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது, இது தவிர வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com