Former Minister Senthil Balaji Moves An Urgent Anticipatory Bail Application In Madras High Court-செந்தில் பாலஜி முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

தனக்கு முன் ஜாமீன் கோரி செந்தில் பாலஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் வருகிற திங்கள் கிழமை இந்த வழக்கை விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Former Minister Senthil Balaji Moves An Urgent Anticipatory Bail Application In Madras High Court-செந்தில் பாலஜி முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செந்தில் பாலஜி முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

    

முன்னாள் அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி அவர்கள் தனக்கு முன் ஜாமீன் வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதிமுகவில் 2011-16 காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு தாவி சென்றார்.தினகரன் கட்சியில் இருந்து விலகி 2018ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த அவர் தி முகவின் சார்பில் அவரகுரிசி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது 16 பேரிடம் ரூ.95 லட்சம் வரை வேலை வாங்கி தருவதாக பெற்றுக் கொண்டு செந்தில் பாலாஜி மோசடி செய்ததாக அம்பத்தூர் கணேஷ் குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூன்று பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது சென்னை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த வழக்கில் செந்தில் பாலாஜி ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com