Keladaa Manida songs lyrics from Bharathi tamil movie

Keladaa Manida songs lyrics from Bharathi and all songs lyrics from Bharathi, கேளடா மானிடாவா பாடல் வரிகள்

Keladaa Manida songs lyrics from Bharathi tamil movie

கேளடா மானிடாவா பாடல் வரிகள்

Movie Bharathi (2000) (பாரதி) Movie Name (in Tamil) (பாரதி)
Year 2000 Music Ilaiyaraaja
Lyrics Bharathiar Singers Rajkumar Bharathi

கேளடா ...மானிடவா ...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
கேளடா ...மானிடவா ...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை

ஏழைகள் யாருமில்லை ...செல்வம் ..ஏறியோர் என்றும் இல்லை ...
வாழ்வுகள் தாழ்வுமில்லை...என்றும் ..மாண்புடன் வாழ்வோமடா ...

கேளடா ...மானிடவா ...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
கேளடா ...மானிடவா ...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை

வெள்ளை நிறத்தொரு பூனை..எங்கள் வீட்டில் வளருது கண்டீர் ...
பிள்ளைகள் பெற்றதப் பூனை - அவை பேருக் கொருநிற மாகும்
சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ் சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந் தாலும் - அவை யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது ஏற்றமென் றுஞ்சொல்ல லாமோ?

சாதி பிரிவுகள் சொல்லி - அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதி பிரிவுகள் செய்வார் - அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதி கொடுமைகள் வேண்டாம், - அன்பு தன்னிற் செழித்திடும் வையம்;
சாதி கொடுமைகள் வேண்டாம், - அன்பு தன்னிற் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

கேளடா ...மானிடவா...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
கேளடா ...மானிடவா...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வர்த்திடு மீசன்;
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வர்த்திடு மீசன்;
மண்ணுக்குள்ளே சில மூடர் -நல்ல மாத ரறிவை கெடுத்தார்
மண்ணுக்குள்ளே சில மூடர் -நல்ல மாத ரறிவை கெடுத்தார்

கண்க ளிரண்டினி லொன்றைக் - குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
கண்க ளிரண்டினி லொன்றைக் - குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?

பெண்க ளரிவை வளர்த்தால் - வையம் பேதைமை யற்றிடும் காணீர்.

கேளடா ...மானிடாவா...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
கேளடா ...மானிடாவா...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை

Lyrics List

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 
For Advertiment Contact : makkalmedia2020@gmail.com