Vilakku Vaipom songs lyrics from Aathmaa tamil movie

Vilakku Vaipom songs lyrics from Aathmaa and all songs lyrics from Aathmaa, விளக்கு வைப்போம் பாடல் வரிகள்


ஆத்மா – விளக்கு வைப்போம்

Movie
Aathmaa
Music Ilaiyaraaja
Year 1993 Lyrics
Vaali

 

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
திரி எடுத்து நெய் விட்டு நெய் விட்டு
தித்திக்கும் முத்துசுடர் ஆட

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ

மரக்கிளையில் காற்றில் ஆடும்
மஞ்சள் கொடியே
ஒஹோ ஹோ ஒஹோ ஹோ
மனக்குறையை தீர்த்து வைக்கும்
மணிக் கொடியே
ஒஹோ ஹோ ஒஹோ ஹோ
குலமகளே கூடி நின்று
குலவையிட்டு பாடுவோம்
கொலுசு ஒளிக்க கோயில் முன்னே
கும்மிக்கொட்டி ஆடுவோம்
இருக்குதொரு சாமி தான்
ஓஹோ ஓஹோ ஒஹோ
உலகறிஞ்ச சேதி தான்
ஓஹோ ஓஹோ ஒஹோ
மறைஞ்சிருக்கும் நிறைஞ்சிருக்கும்
மறுப்பவங்க யாரு கூறடி

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ

தலையெடுத்து தீமையெல்லாம்
தத்திக் குதிச்சா
ஒஹோ ஹோ ஒஹோ ஹோ
களையெடுத்து காத்திருப்பா
அம்மன் நினைச்சா
ஒஹோ ஹோ ஒஹோ ஹோ
அலைகடலை ஆணையிட்டு
அடக்கிடுவோர் யாரடி
அருமையிலுள்ள ஆதிசக்தி
பெருமைகளை கூறடி
நாத்திகத்தை பேசிட
ஓஹோ ஓஹோ ஒஹோ
நாக்கு தந்தது யாரடி
ஓஹோ ஓஹோ ஒஹோ
மறைஞ்சிருக்கும் நிறைஞ்சிருக்கும்
மறுப்பவங்க யாரு கூறடி

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
திரி எடுத்து நெய் விட்டு நெய் விட்டு
அடி தித்திக்கும் முத்துசுடர் ஆட

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ

ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com