Aattama Therottama songs lyrics from Captain Prabhakaran tamil movie

Aattama Therottama songs lyrics from Captain Prabhakaran and all songs lyrics from Captain Prabhakaran, ஆட்டமா தேரோட்டமா பாடல் வரிகள்

Aattama Therottama songs lyrics from Captain Prabhakaran tamil movie

ஆட்டமா தேரோட்டமா பாடல் வரிகள்

Movie Captain Prabhakaran (1991) (கப்டன் பிரபாகரன்) Movie Name (in Tamil) (கப்டன் பிரபாகரன்)
Year (1991) Music Ilaiyaraaja
Lyrics Gangai Amaran Singers Swarnalatha

 

ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்

ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்பா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
(ஆட்டமா..)

ஏறாத மேடை இங்கு இளமானும் ஏறி
ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி
யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி
அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி
ராக்கோழி சத்தம் கேட்குது - என் ராசாவே...
பூங்காற்றும் வட்டம் போடுது
வீராப்பு கண்ணில் பட்டது - என்னை நீ தேட
மாராப்பு மெல்ல சுட்டது
பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ
புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ
கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
(ஆட்டமா..)

ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்பா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
(ஆட்டமா..)

யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு
நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு
நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு
நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு
கண்ணாலே கட்டி வைக்கவா - அட மாமா என்
கையாலே பொட்டு வைக்கவா
பூ பந்தல் போட சொல்லவா - அட மேளங்கள்
தாளங்கள் சொல்லி தட்டவா
பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்கோலம் காண்போமா
போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா
கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
(ஆட்டமா..)

ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்பா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com