cook with comali comedy dhardbar coming up- குக் வித் கோமாளி நகைச்சுவை தர்பார்

குக் வித் கோமாளி ஷோவில் நடக்கும் நகைச்சுவை கலாட்டக்கல்

cook with comali  comedy dhardbar coming up- குக் வித் கோமாளி நகைச்சுவை தர்பார்

விஜய் டிவி அப்டினாலே பிரம்மாண்டம் , T R B க்கு பஞ்சம் கிடையாது, கொஞ்ச நாளாவே விஜய் டிவியில் நிறைய என்டர்டைமென்ட் ஷோ கொண்டு வந்தாங்க அதுல ஒரு ஷோவான குக் வித் கோமாளி ஷோ தலைப்பு என்னமோ குக் பத்தி இருக்கு ஆனா அது பயங்கர காமெடி ஷோ போல இருக்கு. சிரிச்ச போச்சு, கலக்க போவது யாரு போன்ற காமெடி ஷேவி விட செம்ம சூப்பர் டூப்பர் தான் சொல்லனும்.

இந்த ஷோவை ரக்ஷன் மற்றும் அறந்தாங்கி நிஷா அவர்கள் தொகுத்து வழங்க நம்ம எல்லருக்கும் புடிச்ச chef வெங்கடேஷ் பட், மற்றும் தாமு அவர்கள் இந்த ஷோ உடைய நடுவர்களாக இருக்காங்க. இந்த ஷோஉடைய டாப்  ஹீரோ அப்டின்னா நம்ம புகழ் மற்றும் பாலா தாங்க. அவங்க அடிக்கிறிய லூட்டி தாங்க முடியல . அதுலயும் ரம்யா பாண்டே வெச்சு இவிங்க பண்ற அலப்பறை தாங்க முடியல அதுவும் ரக்ஷன் கொஞ்சம் ஓவர தான் போராறே அப்டிங்கற அளவுக்கு இருக்கு... நம்ம வடிவேலு அவங்க காமெடி போல நம்ம கொஞ்சம் ஓவரா தா போறோமோ அப்டிங்கற மாதிரி இருக்குதுன்னு ரக்ஷன் இப்ப கொஞ்சம் கம்மி பண்ணிக்கிட்டார்னு  தான் சொல்லனும்.

நம்ம ஷிவாங்கியையும் மணிமேகலையும் சொல்லவே வேண்டாம் . காமெடி பண்ணவே தேவை இல்லை இவங்க  பேசினாலே காமெடியத் தான் இருக்கு. மக்கள் மத்தயில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. சமையல் போட்டியில் கலந்து கொண்டவர்கள் இந்த கோமாளிகளை வைத்து சமையல் செய்யும் போது  படும் கஷ்டம் பார்வையாளர்களுக்கு நல்ல ஒரு காமெடி விருந்துன்னு சொல்லலாம் தாடி பாலாஜி சமைக்கவே தெரியாதுன்னு சொல்லிக்கிட்டு தான் இருக்கார் அனால் ஒவ்வொரு வாரமும் மிகச் சிறப்பாக சமைத்து எல்லோரையும் ஆச்சர்ய படுத்திறார், வனித்தா அவங்களை பத்தி சொலவே தேவை இல்லை சூப்பரா சமைப்பாங்க. ரோபோஷங்கர் மாணவி பிரியங்கா காமெடிக்கு காமெடி சமையல் க்கு சமையல்ன்னு க்ளகரங்க. ரேக்கா  மேடம் பத்தி நமளுக்கு தெரிந்தது அவங்க மிகச் சிறந்த நடிகைன்னு தான் தெரியும் ஆனால் இந்த ஷோ மூலம்  தான் அவங்க சுபெர்ஷ் சமைப்பாங்க அப்டிங்கற விஷயம் தெரியவந்துள்ளது.  வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8மணி முதல் 9 மணி வரை இந்த ஷோ நடை பெறுகிறது. . இந்த ஷோ எல்லா காமெடி ஷோக்கும் சாவல் விடும் அளவுக்கு காமெடியில் கலக்கிக் கொண்டு வருகிறது. மக்கள் மனதில் மிகப் பெரிய இடத்தை .இடம் பிடித்துள்ளது

 

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்