makkalmedia - Aalapol Velapol songs lyrics from Ejamaan tamil movie

Aalapol Velapol songs lyrics from Ejamaan and all songs lyrics from Ejamaan, ஆலப்போல் வேலப் பாடல் வரிகள்

ஆலப்போல் வேலப் பாடல் வரிகள்

Movie Ejamaan Movie Name (in Tamil) (எஜமான்)
Year (1993)  Music Ilaiyaraaja
Lyrics Vaali Singers S. P. Balasubramaniam

பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நானிருப்பேனே
நாலப்போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்றிருப்பேனே
பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ..ஆ...
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே

பெண்குழு : தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்துதா தும்தும்
தும்தும்தும்துதா தும்தும் தும்துதா தும்தும் தும்தும்

***

பெண் : எம்மனச மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு
இன்னுமென்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு

பெண்குழு : ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஒ...ஓ...ஒ...

ஆண் : கொத்து மஞ்சள் தான் அரைச்சி நித்தமும் நீராடச் சொல்லு
மீனாட்சிக் குங்குமத்த... நெத்தியில சூடச் சொல்லு

பெண் : சொன்னத நானும் கேட்குறேன் சொர்ணமே அங்கபோய் கூறிடு

ஆண் : அஞ்சல மால போடுறேன் அன்னத்தின் காதுல ஓதிடு

பெண் : மாமன் நெனைப்புத்தான் மாசக்கணக்கிலே பாடா படுத்துதென்னையே புது பூவா வெடிச்ச தென்னையே

ஆண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
ஆசைநெஞ்சில் நானிருப்பேனே

பெண் : நாலப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

***

ஆண் : வேலங்குச்சி நான் வளச்சி வில்லுவண்டி செய்ஞ்சு தாறேன்
வண்டியிலே வஞ்சி வந்தா வளச்சி கட்டி கொஞ்ச வார்றேன்

பெண் : ஆலங்குச்சி நான் வளச்சி பல்லக்கொன்னு செய்ஞ்சுதாறேன்
பல்லக்குல மாமன் வந்தா பகல் முடிஞ்சி கொஞ்ச வாறேன்

ஆண் : வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே ராத்திரி

பெண் : கட்டிலில் போடும் பாயும் தான் குத்துதே குத்துஊசி மாதிரி

ஆண் : ஊரும் உறங்கட்டும் ஒசை அடங்கட்டும்
காத்தா பறந்து வருவவேன் புதுபாட்டா படிச்சி தருவேன்

பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்றிருப்பேனே

ஆண் : பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ...
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

ஆண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
ஆசைநெஞ்சில் நான் இருப்பேனே

பெண் : நாலப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

Lyrics List

 

 

மேலும் தெரிந்து கொள்ள:

எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க மக்களே


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com