Nallathor Veenai songs lyrics from Bharathi tamil movie

Nallathor Veenai songs lyrics from Bharathi and all songs lyrics from Bharathi, நல்லதோர் வீணைசெய்தே பாடல் வரிகள்

Nallathor Veenai songs lyrics from Bharathi tamil movie

நல்லதோர் வீணைசெய்தே பாடல் வரிகள்

 

Movie Bharathi (2000) (பாரதி) Movie Name (in Tamil) (பாரதி)
Year 2000 Music Ilaiyaraaja
Lyrics Bharathiar Singers Ilaiyaraaja, Mano

 

நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
சொல்லடி , சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ, இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?
சொல்லடி சிவசக்தி ! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?

விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்,
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவம்எனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகம்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன், இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ ?

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com