makkalmedia - Mannana Poranthavuga songs lyrics from Desiya Geetham tamil movie

Mannana Poranthavuga songs lyrics from Desiya Geetham and all songs lyrics from Desiya Geetham, மன்னனா பொரந்தவுக பாடல் வரிகள்

மன்னனா பொரந்தவுக பாடல் வரிகள்

Movie Desiya Geetham  Movie Name (in Tamil) (தேசிய கீதம் )
Year (1998) Music Ilaiyaraaja
Lyrics   Singers Pushpavanam Kuppusamy

மன்னனா பொரந்தவுக மண்ணெண்ணைக்கு நிக்குறாக
அரசனா பொரந்தவுக அரிசிக்காக நிக்குறாக
மன்னனா பொரந்தவுக மண்ணெண்ணைக்கு நிக்குறாக
அரசனா பொரந்தவுக அரிசிக்காக நிக்குறாக
அரிசி பருப்ப அரைகுறையா நிறுப்பானே
அவன் மந்திரம் போட்டு மண்ணெண்ணை அளவ கொரைப்பானே
அரிசி பருப்ப அரைகுறையா நிறுப்பானே
அவன் மந்திரம் போட்டு மண்ணெண்ணை அளவ கொரைப்பானே
 லிட்டருக்கு ஐநூறு வீடு வந்து சேராது
ரேசணுல கோளாறு கேட்பது யாரு

 சோதனைக்கு மந்திரி வந்தா ரேசன் கடை ரெண்டு படும்
மந்திரிக்கு சோதனை வந்தா எங்க போயி கொண்டு விடும்
சாதனையின் பட்டியல் மட்டும் கொறையாது
எங்க வேதனைய லிஸ்ட்டு போட முடியாது
சாதனையின் பட்டியல் மட்டும் கொறையாது
ஏழை எங்க வேதனைய லிஸ்ட்டு போட முடியாது
 சட்டம் போடும் சர்க்காரு ஊரு வந்து சேராது
மானங்கெட்ட நம்மூரு கேட்பது யாரு
சட்டம் போடும் சர்க்காரு ஊரு வந்து சேராது
மானங்கெட்ட நம்மூரு கேட்பது யாரு

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com