Paadi Parantha songs lyrics from Kizhakku Vasal tamil movie

Paadi Parantha songs lyrics from Kizhakku Vasal and all songs lyrics from Kizhakku Vasal, பாடிப் பறந்த கிளி பாடல் வரிகள்

பாடிப் பறந்த கிளி பாடல் வரிகள்

Movie
Kizhakku Vasal
Movie Name (in Tamil)  (கிழக்கு வாசல்)
Year 1990 Music Ilaiyaraaja
Lyrics R. V. Udayakumar Singers S. P. Balasubramaniam

பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே

ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கண்ட கனவு அது காணானாச்சு
கண்ணு முழிச்சா அது வாழாது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது
வீணாச தந்தவரு யாரு யாரு
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே

சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சிப் போனதடி
சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சிப் போனதடி
கல்லிலடிச்சா அது காயம் காயும்
சொல்லிலடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு

பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே

Lyrics List

\

 

லும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com