CSK vs SRH: 'டாஸ் வென்றது சிஎஸ்கே'...தலைவலி ஏற்பட போகுது: தோனி பேட்டி.

சிஎஸ்கே,தோனி

CSK vs SRH: 'டாஸ் வென்றது சிஎஸ்கே'...தலைவலி ஏற்பட போகுது: தோனி பேட்டி.

ஐபிஎல் 16ஆவது சீசன் 29ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.இதை தொடர்ந்து சேப்பாக்கத்தில் துவங்கி நடைபெறவுள்ள இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.டாஸ் வென்றப் பிறகு தோனி பேசியதாவது,முதலில் பந்துவீச விரும்புகிறோம். இந்த பிட்சில் பேட்டர்கள், பௌலர்களுக்கு இடையில் சமமான போட்டி இருக்கும் எனக் கருதுகிறார். 
 

சேப்பாக்கத்தில் கடந்த இரண்டு முறையும் பெரிய ஸ்கோர்கள்தான் அடிக்கப்பட்டது. இம்முறை சுழலுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே லெவன் அணி: டிவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி, துஷர் தேஷ்பண்டே, மகீஷ் தீக்‌ஷனா, மதிஷா பதிரனா.