The Special Month Of Margali - மார்கழி மாதத்தின் சிறப்புகள்
மார்கழி மாதத்தில் நாம் வழிபடக்கூடிய தெய்வங்கள்
மார்கழி மாதம்
மாதங்களிலேயே மிகச் சிறந்த மாதம் மார்கழி மாதம் தான். மார்கழி மாதத்தில் நாம் அதிகாலையில் எழுந்து அதாவது அதிகாலை என்பது காலை 4:30 க்கு எல்லாம் எழுந்து குளித்துவிட வேண்டும். ஆதவன் வரும் முன் அதாவது சூரியன் வரும் முன் குளித்து விட வேண்டும் ஏனேன்றால் அதிகாலையில் நமக்கு கிடைக்கும் ஆக்ஸிஜன் நாம் வருடம் முழுவதற்க்கு தேவையான ஆரோக்கியத்தை தரும்.
அதிகாலை எழுதல்ஆதவன் வரும் முன்
பொதுவாக மார்கழி மாதத்தை பீடை மாதம் என்பர் ஆனால் மார்கழி மாதம் அது போன்ற மாதம் அல்ல மிகச் சிறப்பு வாய்ந்த மாதம் என்று சொல்ல வேண்டும். அதிகாலையில் எழுந்து குளித்த பின் வாசலில் சாணம் தெளித்து கோலம் போட வேண்டும். கோலப்பொடியானது அரிசிமாவினால் போட வேண்டும் இந்த மாதம் குளிர் மிகுதி என்பதால் சிறு சிறு பூச்சிகளுக்கு உணவு கிடைப்பதில் பிரச்சனை, ஆகையால் நாம் அரிசிமாவினால் கோலம் போடும் போது பூச்சியினங்களுக்கு உணவு கிடைக்கும்.இதனால் மற்ற உயிரினங்களை உணவிற்க்காக தாக்காது.இதனால் எந்த உயிரினத்திற்கும் பாதிப்பு எற்படாது. அதுபோல் தான் மனித உயிரினமாகிய நாமும் தீய குணங்களுக்கு ஆட்படாமல் இருக்க இறைவனை வேண்டி மாலை அணிந்து அனுதினமும் இறைவனை வேண்டி பிராத்திக்கிறோம். இப்போது புரிகிறதா ? ஏன் இந்த மாதத்தில் மாலை அணிகிறோம் என்பதற்கான காரணம்.
அரிசிமாவில் கோலம் போடுதல்
அதே போல் கோலம் இரவிலேயே போட்டு விடக்கூடாது அதாவது இன்றைய நவீன காலத்தில் நாளை போட வேண்டிய கோலத்தை முந்தய இரவே கோலம் போட்டுவிடுகின்றனர். அப்படி செய்யக்கூடாது அதிகாலையில் குளித்த பின் தான் கோலம் போட வேண்டும், ஏன் மார்கழி மாதத்தில் திருமணம் செய்ய கூடாது என்று தெரியுமா?
இறைவனை வணங்கும் மாதம்
மார்கழி மாதத்தில் பயிர்களை விதைக்க கூடாது ஏன் என்றால் இந்த மாதம் அறுவடைக்கான நேரம் . இந்த மாதத்தில் விதைத்தால், விதை சரியான உயிர் தன்மையற்று வளராமல் போய்விடும் என்ற காரணத்திற்காகத் தான் மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது என சொல்கின்றனர். இந்த மாதம் இறைவனை வணங்க வேண்டிய மாதம் ஆகையால் தான் இந்த மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது என்று நம் மூதாதையர்கள் நம் அனைவருக்கும் கற்றுக்.கொடுத்த மிகப் பெரிய ஞானம் .
பக்திக்கு உரிய மாதம் என்பதால்வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் போன்ற மிக அருமையான இறைவனின் அருளைப் பெறக் கூடிய மிகச் சிறப்பான மாதம் .
வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்
இந்த மாதத்தில் காலை மாலை என இரு நேரங்களிலும் பக்தி மிக்க பாடல்களை பாட வேண்டும். அது நம் மனதை எந்தவித சஞ்சலங்களும் தங்க விடாமல் தடுத்து விடும் இத்தனை சக்தி வாய்ந்த இந்த மாதத்தை நாம் ஆரவாரமாக கொண்டாடி மகிழ்வோம்
மேலும் தெரிந்து கொள்ள:
- இந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி? அதிர்ச்சி பின்னணி
- கஜா புயல் காரைக்காலை சூறையாடியது
- Dirty Pondatti HD Video Song - Kaatrin Mozhi - Jyotika - G. Dhananjayan - Madhan Karky - Radhamohan
-
பண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தை உலக்கையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்
- 5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும் ரவுடி பேபி சூர்யா rowdy baby surya gpmuthu திருந்தவிடுங்கடா
- ஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க மக்களே
- கமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்!
- ஆசிரியரை அழகாய் மிரட்டும் சிறுவன் Cute Rowdy Baby Video Tamil Funny School Boy Viral Video
- Koyambedu live snake catching
- எறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு
- பண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்
- DARBAR Review - Rajinikanth - Nayanthara - A.R. Murugadoss - Anirudh -தர்பார்
Comments (0)