New Labour Law Oppose Bank Employees And Civil Servants - புதிய தொழிலாளர் சட்டத்தை எதிர்க்கும் அரசு ஊழியர்கள், வங்கி நிர்வாகிகள்
புதிய தொழிலாளர் சட்டத்தை எதிர்க்கும் அரசு ஊழியர்கள், வங்கி நிர்வாகிகள்
மத்திய அரசு நாளுக்கு நாள் புது புது திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. போன மாதம் தான் குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு என மக்கள் விரும்பாத திட்டங்களை அறிவித்திருந்தது. அதற்க்கு மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே இருக்கிறார்கள் அந்த குழப்பமே இன்னும் மக்கள் மனதில் இருந்து நீங்க வில்லை அதற்குள் புதிய தொழிலாளர் சட்டம் ஒன்றை அமலுக்கு கொண்டு வந்ததுள்ளது,
சட்டம் சொல்வது என்ன:
அந்த சட்டம் என்னவென்றால் இந்தியாவில் தொழிலாளர்களுக்கு சுமாராக 44 சட்டங்கள் இருக்கின்றன. இந்த 44 சட்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து, வெறும் 4 பிரிவுகளாக மட்டும் பிரித்து புதிய சட்டங்களைக் கொண்டு வருவதாக கடந்த ஜூலை 2019-ல் சொல்லப்பட்டது அதை இப்போது மத்திய அரசு அமலுக்கு கொண்டுவந்துள்ளது. இந்தச் சட்டம் அந்நிய நேரடி முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
சட்டத்தை எதிர்ப்பவர்கள்:
இந்தச் சட்டத்தை வர்த்தக யூனியன்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வரை கொந்தளிக்கத் தொடங்கி இருக்கிறது. .AITUC, HMS, CITU, AIUTUC, SEWA, AICCTU, LPF, UTUC போன்ற 10 வர்த்தக யூனியன்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகள் நாடு தழுவிய பாரத் பந்த்-க்கு ஆழைப்பு விடுத்து இருக்கிறார்கள். சமீபத்தில், தொழிலாளர் நலத் துறை அமைச்சர், வர்த்தக யுனியன்களை அழைத்துப் பேசி இருக்கிறார். மேலும் இந்த போராட்டத்தில் அனைத்துஇந்திய வங்கி ஊழியர்கள், நிதி சார்ந்த நிறுவனங்கள் தவிர, அரசு ஊழியர்களான ரயில்வே பணியாளர்கள், ஸ்டீல் தொழிலாளர்கள், அரசு பாதுகாப்பு உற்பத்தித் துறையில் பணி புரிபவர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
போராட்டமானது ஜனவரி 8ம் தேதி நடக்கப்போகிறது, மத்திய அரசின் இந்த புதிய சட்டங்கள் முழுக்க முழுக்க அடிமைத் தனத்தைத் தான் திணிக்கிறது என உரக்கச் சொல்லி இருக்கிறது வர்த்தக யூனியன்கள்.
Comments (0)