Aalelom Paadi songs lyrics from Aavarampoo tamil movie

Aalelom Paadi songs lyrics from Aavarampoo and all songs lyrics from Aavarampoo, ஆலோலம் பாடி பாடல் வரிகள்

Aalelom Paadi Lyrics - ஆலோலம் பாடி

 

Movie Aavarampoo Movie Name (in Tamil) ஆவாரம் பூ
Year 1993 Music Ilaiyaraaja
Lyrics Ilaiyaraaja Singers Gangai Amaran


ஆண் : ஆலோலம் பாடி
அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும்
ஆவராம் பூவே
தனியானால் என்ன……
துணை இங்கே
நான் பாடும் பாட்டுண்டு

ஆண் : அமுதே என் கண்ணே
பசும் பொன்னே
இனி துன்பம் ஏன் இங்கு….

ஆண் : ஆலோலம் பாடி
அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும்
ஆவராம் பூவே

ஆண் : ஆஆ….மண்ணுலகில்
வந்தோர்க்கெல்லாம்
இன்பம் துன்பம் என்றும் உண்டு
தாய் இழந்த துன்பம் போலே
துன்பம் அது ஒன்றுமில்லை

ஆண் : பூமி என்ற தாயும் உண்டு
வானம் என்ற தந்தை உண்டு
நீங்கிடாத சொந்தம் என்று
நீரும் காற்றும் எங்கும் உண்டு

ஆண் : பூபாளம் பாடும் காலை
வந்து வரவேற்கும்
தாய் இன்றி நின்ற பிள்ளை
தன்னை என்றும் காக்கும்
நீ காணும் எல்லாம் உன் சொந்தம்….

ஆண் : ஆலோலம் பாடி
அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும்
ஆவராம் பூவே
தனியானால் என்ன……
துணை இங்கே
நான் பாடும் பாட்டுண்டு

ஆண் : அமுதே என் கண்ணே
பசும் பொன்னே
இனி துன்பம் ஏன் இங்கு….

ஆண் : ஆலோலம் பாடி
அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும்
ஆவராம் பூவே

ஆண் : சோகம் எதுவும் சுமையே இல்லை
சுகங்கள் கூட சுகமே இல்லை
ஆதரவை தந்தால் கூட
அதையும் இங்கு அறிந்தாய் இல்லை

ஆண் : வந்ததுண்டு போனதுண்டு
உன் கணக்கில் ரெண்டும் ஒன்று
வரவும் உண்டு செலவும் உண்டு
உன் கணக்கில் வரவே உண்டு

ஆண் : ஊர் எங்கள் பிள்ளை என்று
இன்று சொல்லக் கூடும்
உலகம் உந்தன் சொந்தமென்று
உந்தன் உள்ளம் பாடும்
நீ யாரோ அன்பே அமுதே….

ஆண் : ஆலோலம் பாடி
அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும்
ஆவராம் பூவே
தனியானால் என்ன……
துணை இங்கே
நான் பாடும் பாட்டுண்டு

ஆண் : அமுதே என் கண்ணே
பசும் பொன்னே
இனி துன்பம் ஏன் இங்கு….

ஆண் : ஆலோலம் பாடி
அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும்
ஆவராம் பூவே

 

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com