Oorvasi Biography - இதுவரை நமக்கு தெரியாத ஊர்வசி அவர்களின் வாழ்க்கை

ஊர்வசி அவர்களின் வாழ்கையில் நடந்த மிக முக்கியமான தருணங்கள்.

Oorvasi  Biography - இதுவரை நமக்கு தெரியாத ஊர்வசி அவர்களின் வாழ்க்கை
Oorvasi Biography

சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையுலகில் ஜொலித்தவர்கள்  வெகு சிலரே. அவர்களில் ஒருவரான நடிகை  ஊர்வசி அவர்களை பற்றி பார்ப்போம்.மழலை சிரிப்பை திரைக்கு முன் நமக்கு தரும்  நடிகை ஊர்வசி அவர்களை பற்றி  நமக்கு தெரியும். திரைக்கு  பின் அவரை பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த பதிவு.

நடிகை ஊர்வசி அவர்களின் உண்மையான பெயர் கவிதாரஞ்சினி. இவர் குழந்தை நட்சத்திரமாக  மலையாளதிரையுலகில் அறிமுகமானார். நடிகை ஊர்வசி அவர்களின் முதல் தமிழ்திரைப்படம் முந்தானை முடிச்சு. அந்த திரைப்படம் அவருக்கு  மிக பெரிய பெயரை  தமிழ்திரையுலகில் ஏற்படுத்தியது. அதன் பின் அவர் தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளிலும் நடிப்புத்திறமையை  வெளிப்படுத்தினார். நடிகை ஊர்வசி அவர்கள் 2௦௦௦ ம் வருடம் மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயன் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவர்க்கும் 2௦௦1ம் வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

 

 

அது வரை அழகாக நகர்ந்த ஊர்வசி அவர்களின் வாழ்க்கையில் 2௦௦8ம் வருடம் அவர் சற்றும் எதிர் பார்க்காத அந்தநிகழ்வு நடந்தது. 2௦௦8ம் வருடம் இருவருக்கும் இடையே விவாகரத்து நடந்தது. இந்த விவாகரத்துக்கான காரணம்  பற்றி மனோஜ் கே ஜெயன் கூறியது மலையாளதிரையுலகில் பெறும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. அந்த காரணம் என்னவென்றால் நடிகை ஊர்வசி அவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறினார். அதற்க்கு ஊர்வசி அவர்களின் பதில்  மனோஜ்ன் வீட்டில் இருப்பவர்கள்  அனைவரும் மது அருந்துவார்கள் என்றும் அதனால் தான் தனக்கும் அந்தப்பழக்கம் வந்ததாகவும், திருமணத்திற்கு பின்னரே தனக்கு இந்த பழக்கம் வந்ததாகவும் அதுமட்டுமல்லாது இந்த பழக்கத்தில் இருந்து விடுபட பல முயற்சிகள் எடுத்ததாகவும் அதன் காரணமாக மருத்துவரீதியாக பல துன்பங்கள் ஏற்ப்பட்டதாகவும் முழுமையாக அந்த பழக்கத்தில் இருந்து வெளியில் வந்து விட்டதாக கூறினார்.

அதன்பின் அவர் 2013 ம் வருடம் சென்னையைச் சேர்ந்த சிவப்ரசாத் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவர்க்கும் ப்ர்ஜ்பதி என்ற மகன் இருக்கிறார்.

 

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com