Edappadi Palaniswami Playing Cricket-எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் IAS அதிகாரிகளுக்கான விளையட்டுபோட்டியை துவங்கி வைத்துள்ளார்
IAS அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டி சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது . அதை நம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் துவங்கி வைத்து உள்ளளார்.முதல்வர் அவர்கள் வெள்ளை நிற சட்டை வெள்ளை நிற பேண்ட் அணிந்து வந்திருந்தார்
குடியுரிமை பணி அதிகாரிகளுக்கான விளையாட்டுப்போட்டியை துவங்கி வைத்த போது அவர் கிரிக்கெட் விளையாடி துவங்கி வைத்தார். அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பந்து போட நம் முதல்வர் பட்டிங் செய்தார்.
முதல்வர் அவர்கள் அதிகாரிகளுடன் கிரிக்கெட் விளையாடிய அவர் விளையாட்டுகளில் நாம் பங்கேற்று விளையாண்டால் தான் மன அழுத்தத்தை சமாளிக்க முடியும் என்றார். மேலும் நாம் ஆரோக்கியமாக இருக்க விளையாட்டுகளை விளையாட வேண்டும் என்றும் கூறினார். எந்த வயதாக இருந்தாலும் விளையாடலாம் விளையாட்டிற்கு தடை ஏதும் இல்லை என்றார். விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார்.
Comments (0)