Modern House in Auto Invention of Namakkal Arunprabhu - ஆட்டோவில் வீடு செய்து அசத்தும் நாமக்கல் இளைஞர்

ஆட்டோவில் அழகிய வீடு அமைத்து உள்ளார் நாமக்கல் மாவட்ட இளைஞர் அருண்பிரபு

Modern House in Auto  Invention of Namakkal Arunprabhu - ஆட்டோவில் வீடு செய்து அசத்தும் நாமக்கல் இளைஞர்

ஆட்டோவில் வீடு செய்து அசத்தும் நாமக்கல் இளைஞர் . இப்போது விக்கற விலை வாசி ஏற்றத்தில் வீடு வாங்கறது  நடுத்தர குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பெரிய கனவு, ஆனால் அது இப்போது சாத்தியம் என்கிறார் அருண்பிரபு. யார் இந்த அருண்பிரபு?.. இவர் பற்றி சிறு பார்வை..... நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பிறந்த 23 வயது ஆன இளம் விஞ்ஞானி அருண்பிரபு. இவர் தந்தை பெயர் குணசேகர் வேலூரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார் தாய் கோமதி , தங்கை அக்ஷ்யலக்ஷ்மி சட்ட கல்லூரியில் படித்து வருகிறார். சிறு வயது முதல் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் . சென்னையில் பட்டபடிப்பை படித்து விட்டு பெங்களூரில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். நான்கு சக்கர வாகனத்தில் தான் இது வரை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது ஏன் 3 சக்கர வாகனத்தில் இது வரை யாரும் வீடு அமைக்கவில்லை, அருண்பிரபுவிற்கு வீடு அமைக்கலாம் என்ற எண்ணம் உறவாகியுள்ளது .

அருன்பிரபுவிற்க்கு அதை தொடர்ந்து அவர் பழைய ஆட்டோ ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளார்  அதன் பின்புறம் உள்ள பாகத்தை நீக்கி பஸ்க்கு உரித்தானபாகத்தை பொருத்தி வீடு கட்டியுள்ளார். ஆட்டோவிலையே வியாபாரம் செய்யும் தொழிலாளிகளுக்கும்,ஆட்டோ ஓட்டுனர்கள் . இரவு நேரத்தில் வெளியூர் செல்ல நேரிட்டால் ஆட்டோவிலையே தங்கி விடலாம், எங்கு வியாபாரம் செய்ய சென்றாலும் அங்கேயே வீட்டையும் ஒட்டிக்கொண்டு செல்லாம் இந்த வீட்டை குறைந்த செலவில் உருவக்கயுள்ளார், இந்த வீட்டில் சமையல்அறை, படுக்கைஅறை, நவினகழிப்பிடவசதி, கம்பியுட்டர்அறை, துணிகாயவைக்க இடம், தண்ணிர்காயவைக்க,என சகல வசதிகளுடன் ஒரு வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் வீட்டை வடிவமைத்துள்ளார் மொட்டை மாடி ஒன்றையும் அமைத்து அதில் 25௦ லிட்டர் தண்ணீர் நிரப்பும் அளவிற்கு தண்ணீர் தொட்டி ஒன்றையும் அமைத்து உள்ளார். ஓய்வு எடுப்பதற்கு வசதியாக சாய்வு நாற்காலியும், 6 அடி சுற்றளவும் கொண்ட குடை ஒன்றை நிழலுக்காகவும்  அமைத்துஉள்ளார்., நடமாடும் வீடு என்பதால் வெப்பம் தாக்கமல் இருக்க ஜன்னலையும் வடிவமைத்து உள்ளார், மின்சார வசதிக்காக சோலார் மின் தகடையும் அமைத்து உள்ளார். ஒரு அழகிய நவீன வசதிகளுடன் கூடிய வீட்டை அமைத்து உள்ளார்.

இந்த வீடு கட்டி முடிக்க எனக்கு 5 மாதம் தேவைப்பட்டது   நம்ம  அருண்பிரபுவின் இந்த சாதனையைக்கண்டு கட்டடக்கலை வல்லுநர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர் .இனிமேல் வீடு கட்டணும்ன லேன்ட் வாங்கறதுக்கு பதிலா ஒரு ஆட்டோ வாங்கின போதும் அப்டின்னு யோசிக்க வைத்துவிட்டார் நம்ம இளம் விஞ்ஞானி அருண்பிரபு. அவருடைய கண்டுபிடிப்பை உள்ளூர் வாசிகள் பலரும் ஆர்வமுடன் கண்டு மகிழ்ச்சியடைகின்றனர். இணையதளத்திலும் இவருடைய கண்டுபிடிப்பை பலரும் பாராட்டி பகிர்ந்து கொண்டாடிவருகின்றனர்.

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com