makkalmedia - Maalaigal Idam songs lyrics from December Pookal tamil movie

"Maalaigal Idam songs lyrics from December Pookal and all songs lyrics from December Pookal, மாலைகள் இடம் பாடல் வரிகள்"

மாலைகள் இடம் பாடல் வரிகள்

Movie December Pookal  Movie Name (in Tamil) (டிசெம்பர் பூக்கள்)
Year 1986 Music Ilaiyaraaja
Lyrics Gangai Amaran Singers K. J. Yesudas, K. S. Chithra

மாலைகள் இடம் மாறுது மாறுது 
மங்கள நாளிலே
மங்கையென் தோள்களைக் 
கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம்.. மங்களம்.. மங்களம்..

மாலைகள் இடம் மாறுது மாறுது 
மங்கள நாளிலே
மங்கையின் தோள்களைக் 
கூடுது கூடுது ஆனந்தமாகவே


நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாளாசை
இன்றுதான் கோவிலில் முதல்நாள் பூஜை
நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாளாசை
இன்றுதான் கோவிலில் முதல்நாள் பூஜை

தொட்டுவிட்டுப் போகாமல் தொடரும் காதல்
பட்டுவிழி மூடாமல் தோளோடு மோதல்

தாகங்கள்.. வரும் மோகங்கள்.. 
இனி தத்தளிக்கும்

ம்ம் ம்ம்.. தேகங்கள்.. தரும் வேகங்கள்.. 
வெள்ளி முத்தெடுக்கும்

ம்ம் ம்ம்.. தந்த சுகம்.. கண்ட மனம்
கண்கள் படித்திடும்.. சொந்தம் இனித்திடும்

மாலைகள் இடம் மாறுது மாறுது 
மங்கள நாளிலே

மங்கையின் தோள்களைக் கூடுது கூடுது 
ஆனந்தமாகவே

தந்தன தந்தன னா தந்தனானா
தந்தன தந்தன னா தந்தனானா
தந்தன தந்தன னா தந்தனானா
தந்தன தந்தன னா தந்தனானா
தந்தனான தந்தன தந்தன
தந்தனான தந்தன தந்தன னா


கண்களும் தூங்காமல் கனவில் வாழும்
கைகளில் கங்கையும் கலக்கும் நாளும்
கண்களும் தூங்காமல் கனவில் வாழும்
கைகளில் கங்கையும் கலக்கும் நாளும்

கட்டிலறை நாள்தோறும் கவிதைகள் பாடும்
விட்டுவிடக் கூடாமல் விடிகாலை கூடும்

ஆரங்கள்.. பரிவாரங்கள்.. 
பல அற்புதங்கள்

ம்ம் ம்ம்.. எண்ணங்கள்.. பல வண்ணங்கள்.. 
எழில் சித்திரங்கள்

ம்ம் ம்ம்.. இன்று முதல்.. இன்னிசைகள்
இங்கு பிறந்திடும்.. எங்கு பறந்திடும்

மாலைகள் இடம் மாறுது மாறுது 
மங்கள நாளிலே
மங்கையின் தோள்களைக் 
கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம்.. மங்களம்.. மங்களம்..

மாலைகள் இடம் மாறுது மாறுது 
மங்கள நாளிலே
மங்கையென் தோள்களைக் 
கூடுது கூடுது ஆனந்தமாகவே

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com