Oru Poongavanam songs lyrics from Agni Natchathiram tamil movie

Oru Poongavanam songs lyrics from Agni Natchathiram and all songs lyrics from Agni Natchathiram, ஒரு பூங்காவனம் புதுமணம் பாடல் வரிகள்

Oru Poongavanam songs lyrics from Agni Natchathiram tamil movie

ஒரு பூங்காவனம் புதுமணம் பாடல் வரிகள்

 

Movie Agni Natchathiram (1988) Movie Name (in Tamil) (அக்னி நட்சத்திரம்)
Year (1988) Music Ilaiyaraaja
Lyrics Vaali Singers S. Janaki

ஒரு பூங்காவனம் புதுமணம்
அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)

நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்நடக்கும் தேவதை
என் கோவில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)

நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலைகொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம் யாவையும்
என் மெத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)

Lyrics List

 

 

 

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com