makkalmedia - Vaanam Thottu Pona songs lyrics from Devar Magan tamil movie

Vaanam Thottu Pona songs lyrics from Devar Magan and all songs lyrics from Devar Magan, வானம் தொட்டுப் போன பாடல் வரிகள்

வானம் தொட்டுப் போன பாடல் வரிகள்

Movie Devar Magan  Movie Name (in Tamil) (தேவர் மகன்) 
Year (1994) Music Ilaiyaraaja
Lyrics vaali Singers S. P. Balasubramaniam

வானம் தொட்டுப் போன... மானமுள்ள சாமி... ஹோ...
வானம் தொட்டுப் போன மானமுள்ள சாமி
தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு 
தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே ஊரு சனந் தான் 
தத்தளிச்சி வாடுதையா ஏழ இனந் தான்


போற்றி பாடடி பொன்னே...
தேவர் காலடி மண்ணே…


வெட்டறுவா தாங்கி… ஓ... வீசுகிற ஊரில்... ஹோ...
வெட்டறுவா தாங்கி வீசுகிற ஊரில்
வெள்ளக் கொடி தூக்கி வந்தவனும் நீயே
நல்ல வழி நீ தான் சொல்லி என்ன லாபம் 
சொன்னவன தானே சூழ்ந்ததின்று பாவம்
கலங்காதே ராசா காலம் வரட்டும் 
நள்ளிரவ போன பின்னே வெள்ளி முளைக்கும்


போற்றி பாடடி பொன்னே...
தேவர் காலடி மண்ணே…
தெக்குத் தெச ஆண்ட மன்னர் இனந்தான்
முக்குலத்தச் சேந்த தேவர் மகன் தான் ஹோய்
போற்றி பாடடி பொன்னே...
தேவர் காலடி மண்ணே…

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com