Etho Mogam songs lyrics from Kozhi Koovuthu tamil movie

"Etho Mogam songs lyrics from Kozhi Koovuthu and all songs lyrics from Kozhi Koovuthu, ஏதோ மோகம் ஏதோ தாகம் பாடல் வரிகள்

ஏதோ மோகம் ஏதோ தாகம் பாடல் வரிகள்

Movie Kozhi Koovuthu Movie Name (in Tamil)  (கோழி கூவுது)
Year 1982 Music Ilaiyaraaja
Lyrics Vairamuthu Singers S. Janaki

ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வண்ணக்கிளியே..

ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வண்ணக்கிளியே...


தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட‌ நேரமாச்சு
சூடு கண்ட ஈர மூச்சு தோளச்சுட்டு காயமாச்சு
பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காம தேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே

ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே...

பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டு பாத்து சாய்வதென்ன கண்கள் பூத்து
அக்கம் பக்கம் சுத்தி பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச்சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது

ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வண்ணக்கிளியே...

Lyrics List

 

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com